திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு சசிகலாவை அழைப்பது தொடர்பாகத் தக்க நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் டிஜிபியை சந்தித்து இன்று (ஏப்ரல் 18) மனு கொடுத்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த மாநாடு தொண்டர்கள் தான் கட்சி என்பதை நிரூபிக்கும். எங்கள் தரப்பில் 4 பேர்தான் இருக்கிறார்கள் என்று ஜெயக்குமார் பேசினார்.
இப்போது நாங்கள் மாநாடு அறிவித்ததும், அவர்களும் 4 மாதங்களுக்குப் பிறகு மாநாடு நடத்தப்போவதாகச் சொல்கிறார்கள். 24ஆம் தேதி நடைபெறும் எங்கள் மாநாட்டைக் கண்டு அவர்கள் சிதறி ஓட போகிறார்கள்.
சசிகலாவை அழைப்பது தொடர்பாக உரிய நேரத்தில் தக்க பதில் சொல்லப்படும். வேறு யாரையும் அழைப்பதாக இல்லை. எங்களுடைய செல்வாக்கை இந்த மாநாட்டில் காண்பிப்போம். கர்நாடக தேர்தலில் எங்களுடைய முடிவு என்பது தேர்தல் ஆணையம் கொடுக்கும் முடிவின் அடிப்படையில் இருக்கும்” என்றார்.
பிரியா
சித்த பல்கலை மசோதா: இரண்டாம் முறையும் திருப்பி அனுப்பிய ஆளுநர்
4,133 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்