டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

மணிப்பூர் மறுவாக்குப்பதிவு!

மணிப்பூர் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சித்திரை திருவிழா தேரோட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

கர்நாடகா முழு அடைப்பு போராட்டம்!

கர்நாடகா மாநிலத்தில் மாணவி நேகா கொலை செய்யப்பட்டதை கண்டித்து இஸ்லாமிய வணிகர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

மாணவர் சேர்க்கை!

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார்‌ பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று துவங்குகிறது

சிறப்பு பேருந்துகள்!

சித்ரா பெளர்ணமியை ஒட்டி சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மின்சார ரயில் இயக்கம்!

வெளிமாவட்டங்களில் இருந்து இன்று கிளாம்பாக்கம் திரும்பும் பயணிகள் வசதிக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

தலைவர் 171 டைட்டில் டீசர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 35-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்.

ராஜஸ்தான் – மும்பை மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சீஸ் – சேமியா ரோல்ஸ்

இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel