ஊட்டி கொடைக்கானலுக்கு போறீங்களா? இ பாஸ் வாங்கீட்டிங்களா?

Published On:

| By Kavi

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு. பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள். தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசு இ பாஸ் பெற விண்ணப்பிப்பதற்கான இணைய லிங்க்கை நேற்று அறிவித்தது.

நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை.

ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள்

epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து இன்று 6.5.2024 காலை 6.00 மணி முதல் இ- பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.

விண்ணப்பிப்பது எப்படி?


epass.tnega.org இந்த லிங்கிற்குள் சென்று உங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு மொபைலுக்கு வரும் ஓடிபியை உள்ளிட்டால்
நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை கேட்கும்..

அதில்,

நீலகிரி, கொடைக்கானல், உள்ளூர் பாஸ், முந்தைய பாஸ் ஆகிய 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து கொள்ளலாம்.

இவற்றில் நீலகிரி அல்லது கொடைக்கானலை தேர்வு செய்யும் போது…

விண்ணப்பதாரர் பெயர், வருகையின் காரணம்
வாகன பதிவு எண், மொத்த பயணிகளின் எண்ணிக்கை , வாகன உற்பத்தி வருடம்
வாகன வகை, எரிபொருள் வகை
உள் நுழையும் நாள், வெளியேறும் நாள்
நாடு, மாநிலம், மாவட்டம்
முகவரி 1, முகவரி 2, அஞ்சல் குறியீடு ஆகியவற்றை குறிப்பிட்டு,
தங்கும் இடம் தெரியும் அல்லது தெரியாது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இந்த விவரங்களை பூர்த்தி செய்து சம்மிட் கொடுக்கும் போது,
பிளாஸ்டிக் தடை, குப்பை வீசுவது, சாலையோரம் உணவு சமைப்பது உட்பட மலை பகுதியை சுத்தமாக வைத்துகொள்ள சில விதிமுறைகள் தெரிவிக்கப்படும்.

இதை உறுதி செய்ததும் இ பாஸ் ஜெனெரேட் ஆகிவிடும். இதனை பயன்படுத்தி ஊட்டி, கொடைகானலுக்கு செல்லலாம்.

வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இ.மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் 7.5.2024 முதல் 30.6.2024 வரை பின்பற்றுவார்கள்.

உதகையில் TN 43 பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும், கொடைக்கானலில் TN 57 பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் இ பாஸ் தேவையில்லை.

உள்ளூரிலேயே வசிக்கும் மக்கள் தங்களது வாகன பதிவெண்ணை குறிப்பிட்டு இ பாஸை பெற்றுக்கொள்ளலாம்.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பிளஸ் 2 ரிசல்ட்: வெற்றி பெற்ற திருநங்கை மாணவி!

பிளஸ் டூ ஃபெயிலா? கவலைப்படாதே சகோதரா… உனக்கும் ‘கவுன்சிலிங்’ உண்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel