மணி ரத்னம் – கமல் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
அதனை தொடர்ந்து, தற்போது டெல்லியில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் கமல், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த படத்தில் நடிகர் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இன்று (மே 6) தக் லைஃப் படம் குறித்த ஓர் புதிய அப்டேட் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. ஒரு கார் வேகமாக Drift அடிக்க, மணல் புழுதி பறப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், ” A New Thug in Town” என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது.
வரும் மே 8 ஆம் தேதி நடிகர் சிம்புவின் Glimpse வீடியோ வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Gear up for a Wild Ride!
A New Thug in Town Arrives on May 8th#Ulaganayagan #KamalHaasan #NewThugInTown @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @trishtrashers @abhiramiact #Nasser @C_I_N_E_M_A_A @AishuL_ @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_… pic.twitter.com/7D1JKSTANH— Raaj Kamal Films International (@RKFI) May 6, 2024
நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் தக் லைஃப் படத்தில் இருந்து விலகியதால் தற்போது சிம்பு இந்த படத்தில் நடித்து வருகிறார்.
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இரண்டாவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா