Vermicelli Cheese Roll Recipe

கிச்சன் கீர்த்தனா: சீஸ் – சேமியா ரோல்ஸ்

தமிழகம்

விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பவர்கள், இந்த சீஸ் – சேமியா ரோல்ஸ் செய்து கொடுக்கலாம். ஹெல்த்தியான இந்த ரோல்ஸ் காலை மற்றும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது.

என்ன தேவை?

சேமியா – 2 கப்
வேகவைத்த பச்சைப் பட்டாணி – கால் கப்
வேகவைத்த ஸ்வீட் கார்ன் – கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2
சீஸ் க்யூப் – ஓன்று (துருவிக்கொள்ளவும்)
கொரகொரப்பாக பொடித்த ஓட்ஸ் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். சேமியாவுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடிகட்டவும். ஆறியதும் பாத்திரத்தில் போட்டு மசித்துக்கொள்ளவும். வேகவைத்த பச்சைப் பட்டாணியையும் சேர்த்து மசிக்கவும். இதனுடன், வேகவைத்த ஸ்வீட் கார்ன், நறுக்கிய கொத்தமல்லிதழை சேர்க்கவும். பிறகு, ஆச்சி கரம் மசாலா, ஆச்சி மிளகாய்த் தூள், உப்பு, வெங்காயம் – பச்சை மிளகாய் விழுது, துருவிய சீஸ், பொடித்த ஓட்ஸ் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சற்றே நீளவாக்கில் உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: மீன்பிடி தடை காலத்தில் நல்ல மீன்கள் வாங்குவது எப்படி?

கிச்சன் கீர்த்தனா: கம்பு மாவு அடை

இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!

’ஆர்சிபி ஆசீர்வாதம் வேணுமா? : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *