உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் கம்புக்கு உண்டு. நார்ச்சத்துகள் அதிகம் உள்ள கம்பு செரிமான கோளாறுகளைச் சீராக்கும். வீக் எண்ட் நாளில் வெளியில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கம்பு மாவு அடை செய்து சுவைக்கலாம். அதிக எடை உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து சரியான நேரத்தில் பசி எடுக்க வைக்கும்.
என்ன தேவை?
கம்பு – 2 கப் (ஊறவைத்து, கழுவி, உலரவிட்டு, சற்று ஈரமாக இருக்கும்போதே மெஷினில் கொடுத்து (அ) மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்)
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – கால் கப்
சிறிய பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை வதக்கி, அரைத்த கம்பு மாவுடன் சேர்த்து… உப்பு போட்டு, தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். அடுப்பில் தோசைக்கல்லில் மாவை வைத்து அடையாக தட்டி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா
கிச்சன் கீர்த்தனா: மாதுளை ராய்த்தா
சரவெடியாய் வெடித்த தோனி… சொதப்பிய சிஎஸ்கே : லக்னோ அபார வெற்றி!
இந்த நெலம் சிக்குமா? : அப்டேட் குமாரு