பெரம்பலூரில் முதல் தொழில் பூங்கா: இவ்வளவு வேலைவாய்ப்பா?

Published On:

| By Kalai

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் தொழில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக அரசின், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின்போது கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில், எறையூர் கிராமத்தில் ரூபாய் 1700 கோடி மதிப்பீட்டில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (நவம்பர் 28) திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, பெரம்பலூர் மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் மூலம் ரூபாய் 740 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்படவுள்ள 12 தொழில்நிறுவனங்கள் வாயிலாக எதிர்காலத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சுமார் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா மற்றும் பெரம்பலூர், ஜெயங்கொண்டம், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கலை.ரா

“ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமையில்லை”: அமைச்சர் ரகுபதி!

இரவின் நிழலுக்கு விருதுகள் தொடரும்: பார்த்திபன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share