How to buy fresh fish and seafood

சண்டே ஸ்பெஷல்: மீன்பிடி தடை காலத்தில் நல்ல மீன்கள் வாங்குவது எப்படி?

தமிழகம்

ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.

மீன்பிடி தடை காலங்களில் ஒரு பகுதியில் தடைக்காலம் போடும்போது, இன்னொரு பகுதியில் மீன்கள் கிடைக்கும் என்றாலும், பெரிய அளவில் இருக்காது. எல்லா வகை மீன்களும் கிடைக்காது. கிடைக்கும் மீன்களுக்கும் டிமாண்ட் அதிகம் இருக்கும், விலையும் அதிகமாக இருக்கும்.

எனவே, அந்தக் காலத்தில், குறிப்பிட்ட மீன்தான் வேண்டும் என்று இல்லாமல் கிடைக்கிற மீன் வகைகளை வாங்கிக்கொள்ளலாம். இல்லையெனில் ஆறு, குளத்து மீன்கள் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மீன்களைப் பொறுத்தவரை மத்தி மீனில் அதிகளவில் ஒமேகா 3, கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன.  மீன் எண்ணெய் எடுப்பதற்கு அதிக அளவில் மத்தி மீன் பயன்படுத்தப்படுவதால், இதற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது என்றாலும், இது சீக்கிரமாகக் கெட்டுப் போகக்கூடிய தன்மை உள்ளது என்பதால், கவனித்து வாங்க வேண்டும்.

மத்தி மீனின் காதுகளுக்குப் பின் பூ போன்ற அமைப்பு இருக்கும். இது மீனின் சுவாச உறுப்பு (gills). அதன் நிறத்தை கவனிக்க வேண்டும். பிடித்த உடன் விற்பனைக்கு வந்திருக்கும் மீன் என்றால், அது ரத்த சிவப்பில் இருக்கும். பல மணி நேரம் ஆகியிருந்தால், அதன் நிறம் மங்கிக் காணப்படும்.

இந்த இரண்டு நிலைகளிலும் வாங்கிப் பயன்படுத்தலாம். அதுவே, அந்த சுவாச உறுப்பு அதீத பழுப்பு நிறத்திலோ, அழுக்கு இருப்பது போன்ற தோற்றத்தில் இருந்தாலோ,  மீன் வாடையாக அல்லாமல், அழுகியது போன்று வாடை வந்தாலோ வாங்கக் கூடாது.

பொதுவாக, மீன் வகைகளை வாங்கும்போது, அதன் தோல்தான் இண்டிகேட்டர். அது அந்தந்த மீனுக்கு உரிய தடிமனுடன் இருந்தாலும், ஐஸ் பெட்டியில் வைத்து ஒரேயடியாக விரைத்துப்போனதாக இல்லாமலும், கொழகொழவென இல்லாமலும், மிருதுவாக இருக்க வேண்டும்.

மீன்களைக் கழுவும்போது, கடல் மீன்களை மஞ்சள் கலந்த நீரில் கழுவினால் போதுமானது. ஆனால், அணைப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை கல் உப்பு சேர்த்து நன்றாகத் தேய்த்துக் கழுவினால்தான் அதன் வழவழப்பு தன்மை குறையும்.

கோடைக்காலத்தில் வாங்கும் மீன்களை, உடனடியாக சமைத்துவிடுவதே நல்லது. அதிகபட்சமாக, மூன்று நாள்கள் வரை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்தலாம்.

முக்கியமாக, மசாலா போட்டு ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது. மீனில் ரத்தம் இல்லாத வண்ணம் சுத்தமாகக் கழுவி, தேவையெனில் மஞ்சள் மட்டும் சேர்த்து, ஃபிரீஸ் செய்து வைத்துக்கொள்ளலாம்.

கணவாய் மீனை ஃப்ரெஷ் ஆகக் கிடைக்கும் வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே வாங்கவும். இது பொதுவாக இரண்டு, மூன்று வகைகளில் இருக்கும்.

பார்க்க, இளநீரின் தேங்காய் போன்ற தோற்றத்திலும், மேலே ஜெல்லி போன்றும் இருக்கும். அது தொய்ந்து போயிருந்தால் தவிர்ப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கம்பு மாவு அடை

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா

நடராஜனின் பந்துவீச்சில் பதுங்கிய டெல்லி… அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ்!

டிராவிஸ் அதிரடியில் நிலைகுலைந்த டெல்லி… சாதனை படைத்த ஐதராபாத்!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *