இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்!
கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 26) 2வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
விவிபேட் வழக்கில் தீர்ப்பு!
விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை?
பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு!
கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்று, 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே அதிரவைத்த பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி!
சுமார் 4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்!
தெற்கு ரெயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரெயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் அங்கு செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 280 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரத்னம் ரிலீஸ்!
ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானிசங்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் ரத்னம் படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
கொல்கத்தா – பஞ்சாப் மோதல்!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 42-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பப்பட் ரோல்
கடைசியில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேனே: அப்டேட் குமாரு