சாப்பாட்டுக்கு சைடிஷான அப்பளம்தான் என்றாலும் எதைச் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்புவார்கள். இன்னும் கொஞ்சம் கேட்பார்கள். அப்படிப்பட்ட இந்த பட்பட் ரோல்ஸைச் சிறப்பாக செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
ஈர அப்பளம் – 6 (டிபார்ட்மென்ட் கடைகள் அல்லது பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்)
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 50 கிராம்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
வேகவைத்து, தோல் உரித்து மசித்த உருளைக்கிழங்கு – கால் கப்
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
மைதா பேஸ்ட் – சிறிதளவு (ஒட்டுவதற்கு)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
சோள முத்துகளை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைத்த சோளம், மசித்த உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும், அப்பளத்தின் மீது இந்த மசாலாவைத் தடவி, அதன் மேல் சில்லி ஃப்ளேக்ஸ் தூவி சுருட்டவும்.
ஓரங்களை மைதா பேஸ்ட்டால் ஒட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அப்பள ரோல்களைப் போட்டுப் பொரித்தெடுத்து பரிமாறவும். பொரித்த உடனே சாப்பிட வேண்டும். இல்லையென்றால் நமுத்துவிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முந்திரி சாக்கோ ரோல்
கிச்சன் கீர்த்தனா : பனானா ரோல்ஸ்
கிச்சன் கீர்த்தனா: கலர் காஜா ரோல்