சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டம்! top 10 news today Tamil February 12 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று (பிப்ரவரி 12) தொடங்குகிறது.
யுபிஐ சேவை அறிமுகம்!
இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று நடைபெறும் யுபிஐ சேவை அறிமுக விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார்.
பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு!
பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
செய்முறைத் தேர்வுகள் ஆரம்பம்!
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வினை எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன.
டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாகும்?
இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதிக்கரையில் எடுக்கப்பட்ட மனித மூளையின் திசுக்கள் மற்றும் ரத்த மாதிரிகள் வெற்றி துரைசாமிக்கு உரியதா என்பதன் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
ராமர் கோயிலுக்கு செல்லும் முதல்வர்கள்!
டெல்லி முதல்வர் ஜெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று இன்று வழிபாடு நடத்த உள்ளனர்.
144 தடை சட்டம் அமல்
டெல்லி, ஹரியானாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தலைநகர் நோக்கி பேரணி நடத்த இருப்பதால், டெல்லி எல்லை பகுதியில் இன்று 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தநாள்!
வசீகர குரலால் வசீகரா என் நெஞ்சினிலே பாடல் உட்பட 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அனைவரையும் வசியம் செய்த பாடகி பத்ம ஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தநாள் இன்று.
அஞ்சல் ஹாக்கி போட்டி!
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், 35-வது அனைத்து இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 632வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும்,டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : முட்டைகோஸ் பகோடா
டீக்கடையில அரசியல் பஞ்சாயத்து: அப்டேட் குமாரு
top 10 news today Tamil February 12 2023