senthil balaji case judge question

வீடியோ கான்பிரன்ஸில் ஆஜரான செந்தில் பாலாஜி : நீதிபதி கேள்வி!

அரசியல்

செந்தில் பாலாஜிக்கு  நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து ஜூன் 28ஆம் தேதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஜூலை 12ஆம் தேதியோடு காவல் முடிந்த நிலையில், ஜூலை 26ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இந்த காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி இன்று புழல் சிறையில் இருந்தவாறு காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியிடம் உங்கள் அப்பா பெயர் என்ன என்று நீதிபதி அல்லி கேள்வி எழுப்ப, இதற்கு செந்தில் பாலாஜியும் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் காவலை மேலும் 15 நாளுக்கு நீட்டித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி அல்லி.

பிரியா

அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியாது : கபில் சிபல் வாதம்!

பயிர்களுக்கு இழப்பீடு: கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *