”உதயநிதி மு.க. அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா ? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது” என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் முழு உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்களும் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலலிதா ஆகியோரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்
வாரிசு அரசியலுக்கு எடுத்துக்காட்டு
பின் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசுகையில், “ உதயநிதி – மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா ? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துக்காட்டு இது. தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.
மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அழகிரி சந்திப்பு மூலம் என்னவாக போகின்றது. ஒன்னுமே இல்லை.

உதயநிதி பொறுப்பாக செயல்படவில்லை
விளையாட்டுதுறை அமைச்சராக உள்ள உதயநிதி, தீராத விளையாட்டு பிள்ளையாக உள்ளார். நேரு ஸ்டேடியத்தில் சிந்தடிக் டிராக் அமைப்பதற்கு 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்துள்ளளனர். பொறுப்பாக அவர் செயல்படவில்லை.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல மு.க ஸ்டாலின் எல்லா இடங்களிலும் உதயநிதி சிறப்பாக செயல்படுவதாக கூறி வருகின்றார்.
கருணாநிதியை கலைஞர் என ஏன் குறிப்பிடுகின்றோம். அவர் நடிக்க கூடியவர். அவர்கள் குடும்பமே நடிப்பவர்கள் தான். எதிர்பார்த்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, கடன்சுமை அதிகரிப்பு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜனுக்கு குறைந்த நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
ஆட்சியை கலைக்கலாம்
ஆளுநர் உரையின் போது தரக்குறைவாக மதித்து எதிர்த்து திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி. எதிர்காலத்தில் இதுபோல நடக்கக்கூடாது. இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம்.
வருகின்ற நாடாளுமன்றத்தோடு சட்டமன்றதிற்கு தேர்தல் வந்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்களும் திமுகவினருமே தயாராக உள்ளனர்.
விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வீண் வரி செலவுகளை குறைக்கமுடியும் என்பதால் இது மோடிஜியின் கனவு திட்டம், வல்லரசு நாடாக மாற்ற நினைக்கின்றார்.
மதுரையில் உள்ள உலகதமிழ்ச்சங்கத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை பெரியப்பா என சொல்லும் மு.க ஸ்டாலின் எம்.ஜி.ஆர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் நிச்சயம் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.
அனல்பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வரின் காரை வென்ற சித்தர்!
ஜே.பி நட்டா பதவி காலம் நீட்டிப்பு!
அய்யா, தெர்மாக்கோல் நிபுணரே. சில கேள்விகள்:-
1. உங்க சின்னம்மாவின் (இன்று நீங்கள் அவரை வெறுத்தாலும், அல்லது அப்படி நடித்தாலும்) உறவினர் குடும்பமே அரசியலில் ஈடுபட்டது எந்த வகை வாரிசு அரசியல்?
2.கலைஞர் நடிகர் என்கிறீர். உங்கள் கட்சி நிறுவனர் மற்றும் நிரந்தர பொது செயலாளர் எல்லாம் ஐடி நிறுவன ஊழியர்களா?
3. ஆளுனரின் செய்கையைப் பற்றி எல்லாக் கட்சியினரும், நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சொல்லும்போது நீங்கள் மட்டும் ஒத்து ஊதுவது உங்கள் அடிமைத் தனத்தைக் காட்டுவதாக உங்கள் கட்சியினரே குமுறிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
4. உங்கள் அம்மா ஆட்சியின் போதோ, அல்லது அதற்குப் பின்போ ஏன் நீங்கள் உங்கள் மதுரையில் எம்ஜிஆர் சிலை வைக்க ஏன் முயற்சி செய்யவில்லை?
வாரிசு ஆட்சியில் அடிமை தனம் இல்லை, மோடி வெளிநாடு பயணத்தால் இந்தியாவுக்கு என்ன பலன்? ஒரே நாடு ஒரே தேர்தல் இதன் மூலம் செலவு மிச்சமா நீங்க அடித்த கொள்ளை விடவா