அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஜூலை 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 26) பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், ‘நீங்கள் வாதாடி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கபில் சிபில், குறைந்தது 4 மணி வரை ஆகும் என்று கூறினார்.
தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வரும் கபில் சிபல், “அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் இல்லை. அப்படி இருக்கையில் அமலாக்கத் துறையால் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?
சுங்கத்துறை அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா? முடியாது. காவல்துறை தான் கைது செய்ய முடியும்.
அதாவது கடத்தலில் ஈடுபடுபவரை சுங்கத் துறை அதிகாரியால் கைது செய்ய முடியாது. அவரை காவல் துறையில் தான் ஒப்படைக்க முடியும். இது அமலாக்கத் துறைக்கும் பொருந்தும்” என்று வாதத்தை முன்வைத்து வருகிறார்.
பிரியா
”போரில் ஈடுபட தயாராகுங்கள்”: மக்களுக்கு அழைப்பு விடுத்த ராஜ்நாத் சிங்