lok sabha adjourned 12 pm

மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு!

அரசியல் இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. அப்போது அவை நடவடிக்கைகளை மீறியதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்தார்.

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை துவங்கியதும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செல்வம்

“ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் ஜனநாயக விரோதம்” – மாணிக்கம் தாகூர்

கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *