விமான கழிவறையில் மறைத்து கடத்தப்பட்ட தங்கம்!

Published On:

| By christopher

சிங்கப்பூரில் இருந்து சென்னை விமானத்தில் 1 கிலோ தங்க கட்டியை கடத்த முயற்சித்த வெளிநாட்டு இளைஞரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் 46.13 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1 கிலோ தங்க கட்டியை விமானத்தின் பின்பக்க கழிவறையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தங்கத்தை கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

செஸ் ஒலிம்பியாட்டில் முத்திரை பதித்த 8 வயது சிறுமி: யார் இவர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share