dr krishnasamy says nda aiadmk

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல: கிருஷ்ணசாமி

அரசியல்

அதிமுக, பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்த நிலையில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் இந்த முடிவு தேசிய அளவில் அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் நிலைப்பாடு குறித்து என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சற்றும் எதிர்பார்க்காத துரதிருஷ்டமான முடிவாக பார்க்கிறேன். அதிமுக பாஜக இடையே சில மாதங்களாகவே நாளுக்கு நாள் மனக்கசப்புகள் அதிகரித்து வந்தது. இதை இப்படியே விட்டால் என்டிஏ கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும். பாஜக தேசிய தலைமை தமிழகத்திற்கு வந்து என்டிஏ ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தேசிய தலைமை ஏன் சுணக்கம் காட்டினார்கள் என்று தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற வேண்டும். என்டிஏ கூட்டணியை வலுப்படுத்துவது தான் எங்களுடைய குறிக்கோள். அதிமுக நிலைப்பாட்டை சரிசெய்ய பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டா, அமித்ஷா தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அரசியலில் எதுவும் நிலையானதல்ல. மே மாதத்திற்குள் எதுவும் நடக்கலாம். கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

முகப்பருக்கள் அதிகமா இருக்கா? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

கர்நாடகா பந்த்: தமிழகத்தில் இருந்து பெங்களூருவிற்கு பேருந்துகள் இயக்கப்படுமா?

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 thoughts on “அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல: கிருஷ்ணசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *