மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
டெல்லி பாரத் மண்டபத்தில் இளம் நிபுணர்கள், மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 26) கலந்துரையாடுகிறார்.
ஊராட்சி மணி திட்டம்!
கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஊராட்சி மணி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊராட்சி மணி அழைப்பு மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு விசாரணை!
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு அமராவதி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சிறு, குறு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை!
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் அமைப்பினருடன் சிறு,குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சீமான் வழக்கு விசாரணை!
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
வங்கதேசம், நியூசிலாந்து மோதல்!
வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடக்க பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
கல்வி கடன் முகாம் நிகழ்ச்சி!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கல்வி கடன் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 492-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா: அத்திப்பழ கீர்
எடப்பாடிக்கு அந்த தைரியம் கிடையாது : ஜவாஹிருல்லா