பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் (மே31)உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் . கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம்.
சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாடாளுமன்றத்தில் தேவாரம்- ஆனால் இந்தியே துறைதோறும்…
45 நாள் கெடு: மோடி அரசை எச்சரித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு!