அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்!
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைத் தேர்தல் ஆணையம் இன்று பரிசீலிக்க உள்ளது.
முதல்வர் தனித்தீர்மானம்!
சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
ராமநாதபுரத்தில் ஆளுநர்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பசும்பொன் முத்துராமலிங்கம் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்ல உள்ளார்.
பாஜக யூடியூப் பக்கம் முடக்கம்!
பாஜக அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் நேற்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து வருவதாக பாஜக தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் தேரோட்டம்!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
கொரோனா பணியிழப்பு பேச்சுவார்த்தை!
கொரோனா காலத்தில் பணி இழந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்குவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் அமைச்சர் சி.வி.கணேசன்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 333வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2023!
ஐபிஎல் தொடர் 26வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் ஜெய்ப்பூர் மைதானத்தில் மோதவுள்ளன.
கொரோனா அப்டேட்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,455 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிச்சன் கீர்த்தனா: சாமை பெசரெட்
குரூப் 1 தேர்வு முடிவு எப்போது?