எல்லாருக்குமே தங்களது முகம் அழகாகவும் பளப்பளவெனவும் இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் எங்கேயாவது நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்பு தான் முகத்தில் பொலிவுடன் முகப்பரு தோன்றும். அதனை எப்படியாவது மறைய வைக்க வேண்டும் என்று தான் அப்போது முயற்சிப்போம்.
இதிலிருந்து சருமம் முழுமையாக விடுபட வேண்டும் என்றால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். விலை உயர்ந்த க்ரீம் வகைகளை காட்டிலும் இயற்கையான முறையில் பராமரிப்பு மேற்கொள்ளும் போது அது சருமத்திலிருந்து முகப்பருவை வேரோடு அகற்றப்படுவதோடு சருமத்தை சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
எனவே இந்த இயற்கை முறைகள் உங்கள் பருக்களை அதிக அளவில் உலர்த்தும். அவை என்னவென்று இங்கே பார்ப்போம்.
ஐஸ் கட்டி
ஒரு ஐஸ் கட்டியை சுத்தமான துணியில் கட்டி பருக்கள் மீது மெதுவாக தடவவும். பருக்கள் மீது 30 விநாடிகள் அப்படியே வைத்திருங்கள். சருமத்தில் நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஐஸ் கட்டிகள் உருகும் வரை முகத்தில் தடவவும். விரைவாக வீக்கத்தைக் குறைக்கவும், பருக்கள் விரைவில் குறையவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஐஸ் கட்டியை தடவவும்.
தேன்
ஒரு கப்பில், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்குங்கள். பருக்கள் உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை மெதுவாக தடவவும்.
30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
சமையல் சோடா
ஒரு கப்பில், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள்.
காட்டன் உருண்டையின் உதவியுடன் பருக்கள் மீது இந்த கலவையை தடவுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும், பின்னர் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
எலுமிச்சை சாறு
தக்காளியை மசித்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை முகத்தில் பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி விடவும். இவை உலர உலர மீண்டும் மீண்டும் இரண்டு முறை தடவி பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி எடுக்கவும்.
தினமும் இரண்டு முறை இதை செய்யலாம்.
பூண்டு
முதலில் பூண்டு பற்களை பன்னீரில் நனைத்து 5 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு இடித்து தேன் கலந்து பேஸ்ட் போல் கலக்கவும்.
இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும்.
பூண்டு வைத்தியம் முகப்பருவுக்கு நன்றாகவே கைகொடுப்பதை பயன்படுத்திய பிறகு உணர்வீர்கள். வாரம் மூன்று முறை இதை செய்யுங்கள்.
கற்றாழை
கற்றாழையை தோலுரித்து அதன் ஜெல்லை வெளியே எடுக்கவும்.
ஜெல்லை குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் குளிர வைக்கவும். இந்த குளிர்ந்த ஜெல்லை பருக்கள் மீது தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும்.
சுபஸ்ரீ