அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
2022 ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியது உட்பட 2022 ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா