மே 6-ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,00,699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டு 50,000 சேர்க்கை பதிவு பெற 6 நாட்கள் ஆனது. இந்த முறை ஒரே வாரத்தில் நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளில் 20,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனா். தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா்.
விண்ணப்பப் பதிவு தொடங்கி 7-வது நாளான நேற்று (மே 12 – ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை 1,00,699 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 56,044 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 27,755 போ்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். வரும் நாட்களில் விண்ணப்பப் பதிவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கை அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படுகிறது. விண்ணப்பப் பதிவு, கட்டணம் செலுத்துதல், choice filling, allotment மற்றும் உறுதிப்படுத்தல் என அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படுவது குறிப்பிடத்தக்
விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி!
இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா உருட்ட போறீங்க – அப்டேட் குமாரு
தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை – என்ன தெரியுமா?