ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து வருவதாக அவர் சிகிச்சை பெரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய தமனி நோய் கண்டறியப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. அதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
சுமார் 15 நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இதய தமனி நோய், கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு, மற்றும் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு, மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
அம்மா உணவகம்: அமைச்சர் நேரு முக்கிய அறிவிப்பு!
கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம்!