மதுரை செல்கிறார் முதல்வர்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று (அக்டோபர் 29) மாலை மதுரை செல்கிறார்.
பசும்பொன்னில் அரசியல் விழா!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜையில் இன்று அரசியல் விழா கொண்டாடப்படுகிறது.
1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்!
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மழைக்கால நோய்களுக்காக இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 10 ஞாயிற்றுகிழமைகளிலும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.
இன்று முதல் மீண்டும் துவக்கம்!
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று முதல் விமான போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட உள்ளது.
தீவுத்திடலில் பட்டாசு விற்பனை!
தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது.
14 மாவட்டங்களில் கனமழை!
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து மோதல்!
லக்னோவில் இன்று நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை போட்டியின் 29வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் துவங்குகிறது.
தஞ்சை மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தஞ்சை மாவட்ட அணிக்கு (30 வயதுக்குட்பட்டவர்கள்) வீரர்கள் தேர்வு இன்று காலை 8 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியன் 2 அப்டேட்!
கமல்ஹாசனின் ‘இந்தியன் 2′ படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 526வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்ன சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்க முடியலையா? இதோ சில உணவுகள்!