கோடையின் வெப்பத்தைத் தணிக்க கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஏரி, குளத்தில் நீச்சலடிப்பர். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் நீச்சல் குளங்களுக்குப் படையெடுப்பர். கொளுத்தும் கோடையில் நீருக்குள் தவம் இருக்கச் சொன்னாலும், அத்தனை பேரும் தயார் தான். ஆனால், நீச்சல் தெரியாமல் ஒவ்வோர் ஆண்டும் விபத்துகளும், மரணங்களும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. What is the best way to start swimming?
இந்த நிலையில் சரியான வழிகாட்டுதலுடன் நீச்சல் கற்றுக் கொள்வதே சிறந்தது என்கிறார்கள் நீச்சல் பயிற்சியாளர்கள். இதுகுறித்து சில முக்கியமான தகவல்களையும் பகிர்கிறார்கள்.
“நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் இடம் இதில் மிகவும் முக்கியம். நீச்சல் பயிற்சியை ஆறு அல்லது கிணற்றில் மேற்கொள்ளும்போது நீர் மற்றும் சுற்றுப்புறம் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது நீச்சல் குளம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா, ஸ்விம்மிங் கிட் பேக் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு நன்கு தேர்ந்த நீச்சல் பயிற்சியாளரா என்பதைக் கவனிக்க வேண்டும். அவரது முழு ஒத்துழைப்புடன்தான் கற்க முடியும்.
முதல் இரண்டு நாட்கள் பக்க சுவர்களைப் பிடித்தபடியே, நீச்சல் பழக பயிற்சி அளிப்போம். பயிற்சியாளரின் மேற்பார்வையில், நீச்சல் பழக வேண்டியது மிக மிக அவசியம். முறையாகக் கற்றுக்கொண்டால், ஒரே வாரத்தில் நீச்சல் அடிக்கலாம்.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் நீச்சல் கற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என எல்லோரும் நீச்சல் அடிக்கலாம். காலை, மாலை தான் நீச்சல் பயிற்சிக்கு உகந்த நேரம்.
நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 மணி நேரம் வரையில்கூட பயிற்சியை மேற்கொள்ளலாம். பயிற்சியை மேற்கொள்வதற்கு முன் வயிறு காலியாக இருப்பது நல்லது.
இல்லையெனில், திரவ உணவுகளுடன் பழங்கள் ஏதாவது எடுத்துக்கொள்ளலாம். நீச்சல் அடித்த பிறகு, உடனேயே சாப்பிடாமல், சிறிது நேரம் இடைவெளி விட்டுச் சாப்பிடலாம்.
நீச்சல் பயிற்சிக்கு முன், ‘வார்ம்அப்’ செய்ய வேண்டும். இது, உடம்பு அசதியை நீக்கிப் புத்துணர்ச்சியைத் தரும். அதிலும் குறிப்பாக, வயதானவர்கள் ‘வார்ம்அப்’ செய்வதால், அவர்களுக்குள்ள வலிகள் நீங்கிவிடும்.
நன்கு பயிற்சி பெறாதவர்கள், எங்கு நீச்சல் அடிக்கச் சென்றாலும், ஆழத்துக்குச் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
பொதுவாக, பயிற்சியாளர் இல்லாமல் அல்லது நீச்சலில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாத இடங்களில் நீச்சல் செய்வதைத் தவிர்த்து விட வேண்டும்.
நீச்சல் பயிற்சியை முடித்த பிறகு, குளோரின் கலந்த நீர் உடலில் படிந்து இருக்கும். எனவே, நீச்சல் அடிக்க இறங்குவதற்கு முன்பும், பின்பும் ஷவரில் நன்றாகக் குளித்துவிடுவது நல்லது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி!
அமீர்கானுக்கு பதில் ஷாருக்கானா? – நோ சொன்ன இயக்குனர்… ஹிட் அடித்த “சர்பரோஷ்”
இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா உருட்ட போறீங்க – அப்டேட் குமாரு
ட்விஸ்ட் வைத்த சிஎஸ்கே: ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் இதுதான்!