இடம் பொருள் ஏவல்: ரிலீஸ் தாமதம் ஏன்?

சினிமா

திரைப்படம் வெற்றிபெற அந்தப்படம் வெளியாகும் காலம் மிக மிக முக்கியமானது என்பார்கள். அப்படிப்பட்ட சூழல் உருவாவதற்கு அல்லது அதனை ஏற்படுத்த ’இடம் பொருள் ஏவல்’ என்கிற படத்திற்கு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்திருக்கிறது.

சிறந்த படைப்புக்காக சாகித்ய அகடாமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைதான் இந்தப் படம்.

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கோடிகளை வசூலாக குவித்த ‘ கும்கி ’, சிவகார்த்திகேயனுக்கு வியாபார அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் 2015ம் ஆண்டு தயாரான படம் ‘இடம் பொருள் ஏவல்’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா, வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய மூவரும்,

’இடம் பொருள் ஏவல்’ படத்திற்கு பின் வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களில் நடித்து உயரத்தில் இருந்தபோதும் அந்த படம் கடந்த ஏழு வருடங்களாக வெளியிடுவதற்கு பல முறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் ஒவ்வொரு முறையும் பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக தடைப்பட்டுப் போனது.

படத்தை வெளியிடுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

why idam porul yaeval movie release delay

ஆகையால் இப்படத்தை மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்களில் ஒருவரான போஸ் லிங்குசாமியிடம் பேசியபோது,

சினிமாவில் நீதிமன்ற வழக்கு, பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படங்களின் வெளியீடு தாமதமாவது, தடைபடுவது வழக்கமானதுதான் என்றாலும்,

எங்கள் நிறுவன படங்கள் வெளியாகும் முன் எதிர்கொண்ட பிரச்சினைகள் அசாத்தியமான, அசாதாரணமானவையாகும்.

நாங்கள் யாரையும் ஏமாற்றியதில்லை. ஏமாற்ற எண்ணியதும் இல்லை.

இருந்தபோதிலும் சினிமா வியாபாரங்கள், கடன் ஒப்பந்தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் படிக்காமலேயே கையெழுத்திடுகிறோம்.

நம்பிக்கை பொய்யாகும்போது இதுபோன்ற நீதிமன்ற வழக்கு, தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

’இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் சம்பந்தமான வழக்கு எங்கள் நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை சட்டச் சிக்கல், பஞ்சாயத்து இல்லாமல் தயாரித்து வெளியிடும் அனுபவத்தை கொடுத்துள்ளது” என்றார்.

அம்பலவாணன்

புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து!

அனிருத் இசைக்கச்சேரி: போக்குவரத்து நெரிசலில் திணறும் ஈசிஆர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *