தன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க இருக்கிறார் நடிகை சோனா.
இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான ’மிருகம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை சோனா.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’குசேலன்’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தற்போது தமிழ், மலையாளப் படவுலகில் குணச்சித்திரம், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார், அதோடு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது சுயசரிதையை சினிமாவாகவோ அல்லது வெப் சீரீஸாகவோ தானே தயாரித்து இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை சோனா கூறியிருப்பதாவது, ”என்னுடைய கல்யாண கனவு நடக்காது. என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். அது இனிமேல் நடக்காது என்று எனக்கே தெரிந்துபோய்விட்டது.
அதனால் என்னுடைய சுயசரிதையை எழுத வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசையை நான் இப்போது நிறைவேற்றிவிட்டேன். கூடிய சீக்கிரம் அதை வெப் சீரீஸாகவோ, சினிமாவாகவோ எடுக்கப் போகிறேன்.
நான் ஏன் அதைப் பண்ண வேண்டும் என்று அதிகம் ஆசைப்படுகிறேன் என்றால், எல்லாரும் மற்றவர்களை வெளியில்தான் பார்க்கிறோம். இன்க்ளூடிங் நானும்தான்.
ஒருவரைப் பார்த்து சுலபமாக அவர் அப்படித்தான் என்று முடிவு செய்துவிடுகிறோம். ஆனால், அப்படியில்லை. சில விஷயங்கள் இருக்கின்றன. அதைச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்தப் புரோஜெக்ட்டை செய்தால் என் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கும். It’s very close to my heart. அதை நானே இயக்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்
சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?
மோகன்லால் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை!