விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் தன்னுடைய பிறந்த நாளை விஜய் சேதுபதியுடன் கொண்டாடியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ”பட்டம் போல்” திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் தன் நடிப்பைத் தாண்டி இன்ஸ்டா புகைப்படங்கள் மூலம் நெட்டிசன்களையும், தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் , நேற்று ( ஆகஸ்ட் 6 ) தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். விஜய் சேதுபதியுடன் , மாளவிகா மோகனன் எடுத்து கொண்ட புகைபடத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
அதில் , என் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக உருவாக்கி என்னை மிகவும் நேசிக்கவும் சிறப்பாகவும் மாற்றிய அனைவருக்கும் அன்பு மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைபடங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அறிவியல் தமிழனின் வரலாறு…தம்பிக்கு வாழ்த்து சொன்ன அண்ணன் !