ஸ்பாடிஃபையில் 100 மில்லியன் முறை கேட்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை அரபிக்குத்து பாடல் பெற்றுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான விஜய் படத்தில் இடம்பெறும் பாடல்கள் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும்.
கோலிவுட்டில் இதுவரை யூடியூபில் அதிக தடவை 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது நடிகர் விஜய்யின் திரைப்பட பாடல்கள் தான்.
அடுத்தடுத்து சாதனை!
விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் 300 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்து சாதனை படைத்தது.

ஏற்கெனவே கடந்த ஜனவரி 14ஆம் தேதி வெளியான அரபிக்குத்து பாடலின் லிரிக் வீடியோ 450 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக அனிருத்தின் துள்ளவைக்கும் இசையும், விஜய்யின் ரசிக்க வைக்கும் நடனமும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி வெளிவந்ததில் இருந்து இப்போது வரை கோலிவுட், பாலிவுட் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் அரபிக்குத்து பாடல் இசைக்கப்பட்டு வருகிறது.
டிரெண்டிங்கில் அரபிக்குத்து!
இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாக உலா வரும்.
கடந்த மாதம் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு வந்த பாலிவுட் நடிகை காத்ரீனா கைப், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
அதேபோன்று சமீபத்தில்ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் நடந்த 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அவுட் ஆன போது மைதானத்தில் ஒலித்த அரபிக்குத்து பாடல் அங்கிருந்தவர்களை ஆட்டம் போட வைத்தது.
முதல் தென்னிந்திய பாடல்!
இந்நிலையில் 6 முதல் 60 வயதானவர்கள் வரை பலரையும் கவர்ந்த இந்த பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

ஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்க் தளமான ஸ்பாடிஃபையில் 100 மில்லியன் முறை கேட்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை அரபிக்குத்து பாடல் பெற்றுள்ளது.
இதனையடுத்து நடிகர் விஜய் ரசிகர்கள் #100MStreamsForArabicKuthu ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
வாடகைக் தாய் மகப்பேறு: எத்தனை நாள் விடுமுறை?
ரவீந்திரநாத்தை தான் சிறை பிடிக்க வேண்டும், மேனேஜரை அல்ல: தகிக்கும் தங்கத் தமிழ் செல்வன்