பிச்சைக்காரனாக மாறிய கவின்

Published On:

| By christopher

kavin starrer as a beggar in Nelson's production

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை புரொமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ், அட்லீ, வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளராக மாறியுள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், “சுவாரஸ்யமான கதைகளை தயாரிப்பதே நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். பிளடி பெக்கர் (Bloody Beggar) என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

இது தொடர்பான ஜாலியான புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

kavin starrer as a bloody beggar in Nelson's production

அதில் நெல்சன், ரெடின், கவின், சிவபாலன் அமர்ந்திருக்க, ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் ரெடின், “நம்ம பையனுக்கு நம்ம பண்ணாம யாரு பண்ணுவா” என படத்தை தயாரிக்கும்படி நெல்சனிடம் கோருகிறார். தொடர்ந்து படத்தில் கவின் கதாபாத்திர தோற்றத்தை தயார் செய்து காட்டும்படி சொல்ல நீண்ட நேரமாக ஒப்பனை செய்யப்படுகிறது.

இறுதியில் யாசகம் பெறுபவர் தோற்றத்தில் கவின் வந்து நிற்க, படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்படுகிறது. இறுதியில், “அந்த விக், ட்ரெஸ், எல்லாத்தையும் எடுத்து வைங்க” என ரெடின் சொல்ல, ‘எதுக்கு?” என நெல்சன் கேட்கிறார். “ஒருவேள படம் முடிஞ்சு உனக்கு தேவப்படலாம்” என ரெடின் கவுண்ட் அடிக்க ஜாலியாக முடிகிறது வீடியோ.

Bloody Beggar - Promo Video | Nelson Dilipkumar | Kavin | Sivabalan Muthukumar | Jen Martin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : ஈஸி சிக்கன் பிரியாணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel