நானே வருவேன் திரைப்படத்தின், “ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம்” என்ற பாடல் இன்று (செப்டம்பர் 24) வெளியானது.
தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இவர்கள் கூட்டணியில் உருவான படங்களும், இப்படத்தின் ஆல்பங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சென்றடைந்தது.

இந்தநிலையில், இவர்களது கூட்டணியில் உருவாகியிருக்கும் நானே வருவேன் திரைப்படம் அடுத்த வாரம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். தனுஷ் நானே வருவேன் திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் படத்தின் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். “வீரா சூரா தீரா வாடா” என்ற பாடல் அண்மையில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்தநிலையில், இன்று “ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம்” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார். தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர். “ஒரு ராஜா நல்லவராம் இன்னொரு ராஜா கெட்டவராம்” என்ற வரிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், இப்படத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டு கதாபாத்திங்களில் ஒன்று நல்லவராகவும், மற்றொன்று கெட்டவராகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் 3.35 நிமிடங்கள் உள்ளது. தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தின் பாடலை கொண்டாடி வருகின்றனர். மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செல்வம்
சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி வெளியீடு!
பொன்னியின் செல்வன் -நானே வருவேன்: அதிக தியேட்டர்கள் யாருக்கு? உதயநிதி கையில்!