தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை இயக்கி வருகிறார். SK 23 ஒரு பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
இதற்கிடையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது அது உறுதியாகி உள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 11) இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் – நடிகர் சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சஜித் நடியாவாலா தயாரிக்கும் இந்த படத்திற்கு “ஷிகந்தர்” (Sikandar) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
EID MUBARAK! 🌙🌟
Immerse yourself in the magic of 'Sikandar' as it unfolds on the big screen EID 2025!#SajidNadiadwala Presents @BeingSalmanKhan in and as #SikandarReleasing in cinemas EID 2025 🎬@NGEMovies @WardaNadiadwala #SikandarEid2025 pic.twitter.com/ogMz8kKvIH
— A.R.Murugadoss (@ARMurugadoss) April 11, 2024
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் வெளியான அமீர்கானின் ‘கஜினி’, அக்ஷய் குமாரின் ‘ஹாலிடே’ ஆகிய படங்கள் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், சல்மான் கான் உடனான இந்த கூட்டணியும் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ‘ஜவான்’ படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்ததால், அதே ஸ்டைலில் தமிழ் இயக்குநருடன் கூட்டணி வைத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று சல்மான் கான் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
-கார்த்தி ராஜ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.4.2 கோடி மோசடி : ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!
Thalaivar 171: சூப்பர் ஸ்டாருக்கு ‘வில்லனாகும்’ முன்னணி நடிகர்… அப்போ மைக் மோகன் இல்லையா?