டாப் 10 செய்திகள் : மோடி ராகுல் பிரச்சாரம் முதல் ஐபிஎல் அப்டேட் வரை!

அரசியல்

ஓயும் பிரச்சாரம்!
ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உமர் அப்துல்லா போன்ற பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வரும் 20ஆம் தேதி 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 49 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான பிரச்சாரம் இன்று (மே 18) ஓய்கிறது.

ஊட்டிக்கு வரவேண்டாம்! 
நீலகிரி மாவட்டத்துக்கு மே 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. கன மழை பெய்யும் என்பதால் மாவட்ட ஆட்சியர் அருணா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐபிஎல் அப்டேட்! 
சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.  அதேசமயம் பெங்களூருவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காஞ்சிபுரத்தில் ஆளுநர் ரவி
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் சம்ஸ்கிருத கருத்தரங்கில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு  பேசுகிறாா்.

டெல்லியில் மோடி ராகுல் பிரச்சாரம்! 
ஆறாம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி  இருவரும் இன்று ஒரே நாளில் டெல்லியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.  மோடி வடகிழக்கு டெல்லியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ராகுல் காந்தி சாந்தினி சவுக், வட மேற்கு டெல்லி பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

மழை நிலவரம்! 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுதினம்!
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான போர் 2009ஆம் ஆண்டு மே 18ல் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ரயில் சேவை ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 63 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் பேன்பார்க்!
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் இன்று ஐபிஎல் பேன்பார்க் நடைபெற இருக்கிறது. இதை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக மக்கள் காணலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எத்தனை நம்பர் 1 ஸ்டேட்? அப்டேட் குமாரு

கிச்சன் கீர்த்தனா: கம்பு இடியாப்பம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *