அமலாக்கத் துறையை தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் கவிதாவை சிபிஐ இன்று (ஏப்ரல் 11) கைது செய்துள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளுமான கவிதா அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கவிதாவின் நீதிமன்ற காவலை 14 நாட்களுக்கு இரண்டவாது முறையாக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது
இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கவிதாவிடம் கடந்த சனிக்கிழமை சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட புஜ்ஜி பாபுவின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜ்கள், ஆவணங்கள் ஆகியவை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்வதாக சிபிஐ தரப்பில் இன்று (ஏப்ரல் 11) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன குட் நியூஸ்… கடுப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள்!
தமிழகத்தில் 90% திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!