“தொலைச்சி கட்டிருவேன்”: நள்ளிரவில் போலீசாரை எச்சரித்த அமைச்சர்!

அரசியல்

கன்னியாகுமரி மாவட்டம் கோழிவிளை சோதனைச் சாவடியில் நள்ளிரவில் ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினசரி டாரஸ் லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன என்று அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசினார்.
குவாரிகளில் இருந்து, அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி, அதிக அளவில் ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை கனரக வாகனங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்தச்சூழலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நள்ளிரவு கோழிவிளை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
அந்த சோதனை சாவடியை கடந்து 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்றதை கண்ட அமைச்சர் போலீசாரை அழைத்து எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இன்று (மே 21) காலை முதல் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோவில் அமைச்சர் போலீசாரை பார்த்து, “என்ன பண்றீங்க. இதுக்கா உங்களை இங்கு உட்கார வச்சது. எஸ்.பி.யை கூப்பிட்டு எல்லா வண்டியையும் லாக் பண்ணுங்க.
தொலைச்சி கட்டிருவேன். அங்கிருந்து வரும்போது 50 வண்டிய பாத்துட்டேன். கவர்மெண்ட் ஆர்டர் போட்டதை எல்லாம் பாக்கவில்லையா. கடத்தல் தொழிலா நடக்குது. எல்லா வண்டியையும் ஓரங்கட்டி சாவிய வாங்குங்க” என போலீசாரை எச்சரிக்கிறார்.


இதையடுத்து போலீசார் ஒவ்வொரு லாரியாக சென்று நிறுத்துகின்றனர். அமைச்சரின் ஆய்வு காரணமாக குமரியில் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
பிரியா

விஷ சாராய விற்பனையை தடுக்காதது ஏன்?: சிறப்பு குழு விசாரணை!

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *