தமிழகத்தில் 90% திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக-தேமுதிக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.

வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை Association for Democratic Reforms ஆய்வு செய்தது. இதில் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களில் 90 சதவிகிதம் பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

Association for Democratic Reforms வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

  • அதிமுகவின் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பானது ரூ.37.53 கோடியாக உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில் 33 பேரின் சொத்து மதிப்பானது ரூ.1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
  • திமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.31.22 கோடி. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 22 வேட்பாளர்களில் 21 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கிறது.
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரு.38.93 கோடி. இதில் 22 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கிறது.
  • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.18 கோடி.
  • நாம் தமிழர் கட்சியில் 38 சதவிகித வேட்பாளர்கள் மட்டுமே ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர்,

மொத்தமுள்ள 606 சுயேட்சை வேட்பாளர்களில் 62 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.4.24 கோடி.

இதில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் அதிகபட்சமாக ரூ.13.15 கோடி சொத்து வைத்துள்ளார்.

10 வேட்பாளர்கள் தங்களுக்கு ரூ.1000-க்கும் குறைவாக சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் 8 பேர் தங்களிடம் எந்த சொத்தும் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக சொத்து வைத்திருக்கும் டாப் 3 வேட்பாளர்கள்

அசோக் குமார், ஈரோடு அதிமுக வேட்பாளர் – ரூ.662.46 கோடி

தேவேந்திரன் யாதவ், சிவகங்கை பாஜக வேட்பாளர் (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்) – ரூ.304.92 கோடி

ஏசி சண்முகம், வேலூர் பாஜக வேட்பாளர் (புதிய நீதிக் கட்சி) – ரூ.152.77 கோடி

அதிக கடன் வைத்திருக்கும் டாப் 3 வேட்பாளர்கள்

ஜெகத்ரட்சகன், அரக்கோணம் திமுக வேட்பாளர்  – ரூ.649.5 கோடி

தேவநாதன் யாதவ், சிவகங்கை பாஜக (இந்திய மக்கள் கல்வி கழகம்) – ரூ.98.3 கோடி

கதிர் ஆனந்த், வேலூர் திமுக – ரூ.51.16 கோடி

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தளபதி விஜயின் GOAT ரிலீஸ் தேதி இதோ..!

பாலியல் புகார்: திண்டுக்கல் பாஜக முன்னாள் மாசெ மகுடீஸ்வரன் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel