செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன குட் நியூஸ்… கடுப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள்!

சினிமா

குக் வித் கோமாளி சீசன் 5 சீக்கிரத்திலேயே துவங்க இருக்கிறது. சமையல் தொடர்பான ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் வித்தியாசமான இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் எகிறி அடித்தது.

ஒரு சமையல் நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டு மக்கள் காத்திருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சமையலை கம்மி செய்து, காமெடியை தூக்கலாக காட்டியது தான் இதற்குக் காரணம்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் பெரிய தூண்களே நடுவர்கள் தான். இதேபோல நிகழ்ச்சி சன் டிவியில் “மாஸ்டர் ஷெஃப்” என்ற பெயரில் வெளியானது. ஆனால் அங்கு நடுவர்களின் கண்டிப்பும், அதிகார தோரணையும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு மாறாக குக் கோமாளி நடுவர்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்டின் காமெடி கலந்த அன்பான பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது. இந்நிலையில் தான் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் அதிர்ச்சி அளித்தார்.

ஆனால் விஜய் டிவி சுதாரித்துக் கொண்டு புகழ்பெற்ற சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜை அவருக்கு பதில் களம் இறக்கியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக செஃப் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புதிய நிகழ்ச்சியின் ஆரம்பகட்ட வேலைகளைப் பகிர்ந்து உள்ளார்.

மேலும் அந்த பதிவிற்கு அவர் “சிங்கம் சிங்கிளா தான் வரும். நீங்க சொல்லிட்டீங்க நாங்க ஆரம்பிக்கிறோம். இது தனி வழி” என்று சிலரை சீண்டும் வண்ணமாக கேப்ஷன் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகத்தில் 90% திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!

தளபதி விஜயின் GOAT ரிலீஸ் தேதி இதோ..!

பாலியல் புகார்: திண்டுக்கல் பாஜக முன்னாள் மாசெ மகுடீஸ்வரன் கைது!

+1
3
+1
3
+1
1
+1
6
+1
5
+1
2
+1
6