மாஜி அமைச்சர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : நீதிமன்றம் அதிரடி!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இந்த வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜி தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார். இந்நிலையில் சாத்தூரைச்…