கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தானா கூறிய வீடியோவை பிரதமர் மோடி டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, பாலிவுட் என திரையுலகில் பிஸியாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தானா.
இந்நிலையில் நேற்று (மே 18) தென் இந்தியா – வட இந்தியா, மேற்கு இந்தியா – கிழக்கு இந்தியா வரை…மக்களை இணைக்கிறது… இதயங்களை இணைக்கிறது என்ற கேப்ஷனில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா.
Absolutely! Nothing more satisfying than connecting people and improving lives. https://t.co/GZ3gbLN2bb
— Narendra Modi (@narendramodi) May 16, 2024
அடல் சேது கடல் பாலத்தின் மேல் காரில் பயணிக்கும் ராஷ்மிகா, பாலத்தின் மீது நின்று பேசிய அந்த வீடியோவில், “மும்பை – நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது ‘அடல் சேது’ பாலம். 2 மணி நேரப் பயண நேரத்தை 20 நிமிடமாகக் குறைக்கிறது. 7 ஆண்டுகளில் இது சாத்தியமாகியுள்ளது.
இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளால் தான் நம்மால் பயணிக்க முடிகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக நாடு கண்ட வளர்ச்சியைப் பாருங்கள். இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியோடு நின்றுவிடமால் மேலும் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்” என்று பேசியுள்ளார்.
இந்த காணொளியை டேக் செய்து பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, நிச்சயமாக… மக்களை இணைப்பதையும் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமான விஷயம் வேறெதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“இப்படியொரு கூட்டுக்குள்ள வாழ தோணுதே”: வைரலாகும் யானை குடும்பம்!
share market: இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்!