lal salaam dhanya balakrishan

”செய்யும் தொழில் மேல் சத்தியம்” நடிகை தன்யா பாலகிருஷ்ணா விளக்கம்!

சினிமா

‘லால் சலாம்’ சர்ச்சை தொடர்பாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா தற்போது விளக்கமளித்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘லால் சலாம்’. இதில் ரஜினிகாந்துடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் தன்யாவும் கலந்து கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் குறித்து இழிவாக பதிவிட்டதாக கூறி, ஸ்க்ரீன்ஷாட் ஒன்றினை பகிர்ந்து எப்படி அவருக்கு வாய்ப்பு அளித்தீர்கள்? என ஐஸ்வர்யா மற்றும் ரஜினிகாந்த் இருவரையும் டேக் செய்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

lal salaam dhanya balakrishan

அந்த ஸ்கிரீன்ஷாட்டில்,”அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம்.

உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?”, என தன்யா கேட்பது போல உள்ளது.

இதனால் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா இந்த சர்ச்சை தொடர்பாக தற்போது விளக்கமளித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தன்யா பாலகிருஷ்ணா நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்….கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல.

12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்…அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்… அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை.

அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை.

இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது.

இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல. நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான்.

lal salaam dhanya balakrishan

தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே… அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன்.

என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல.

இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.

சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது…அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

lal salaam dhanya balakrishan

என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு… அன்புடன், தன்யா பாலகிருஷ்ணா,” என தெரிவித்து இருக்கிறார்.

தன்யா பாலகிருஷ்ணனின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் சோதனை : என்.ஐ.ஏ.விளக்கம்!

டிக்கெட் இன்றி பயணம்: ஒரே மாதத்தில் ரூ.4.71 லட்சம் வசூல்!

கடைசி படத்தில் தளபதியை இயக்கப்போவது யார்?

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *