சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 171’ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அந்த படம் முடிவதற்குள்ளாகவே ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ‘தளபதி’ படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் . ஏற்கனவே இந்த காம்போ ‘ஜெயிலர்’ படத்தில் மிரட்டி இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்பொழுது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் சாண்டி மாஸ்டர் நடிக்கிறார்கள் என்பதுதான்.
முன்னதாக வெள்ளி விழா நாயகன் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் தளபதி விஜயுடன் ‘GOAT’ திரைப்படத்தில் நடித்து வரும் மோகனிடம் இதற்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லன் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திகார் ஜெயிலில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!
செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன குட் நியூஸ்… கடுப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள்!
தமிழகத்தில் 90% திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!