பணம் கையில் வந்தால்தான் நிஜம்… அனுபவத்தைச் சொன்ன செல்வராகவன்

சினிமா

பணம் கையில் வந்தால்தான் நிஜம் அதுவரை கனவு காணாதீர்கள் என நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002 ஆம் ஆண்டு வெளியான ’துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காதல் கொண்டேன், 7-ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தொடர்ந்து படங்கள் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க திடீரென நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் செல்வராகவன்.

சாணிக்காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பீஸ்ட், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ஆனால் அவர் தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில், மனதில் தோன்றுவதை சமூகவலைதளங்களில் அடிக்கடி பதிவு செய்து வரும் இவர் இன்று (மார்ச் 8 ) தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம். அனுபவம், தத்துவம் அல்ல ” என பதிவிட்டிருக்கிறார்.

அவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் சிலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் கைலாயம் என்ற ரசிகர் ஒருவர் “உண்மை பணம் இல்லையெனில் பைத்தியம் பிடிக்கிறது பணம் வந்தவுடன் தங்குவதில்லை” என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ” இப்ப தான் சார் ஒரு கணக்கு போட்டேன்….. தெய்வம் போல வந்து காத்தருளிவிட்டீர்கள்! கனவை அழித்துவிட்டேன் நன்றி சார் என்று பதிவிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

போர்க்கப்பலில் தயாரான ‘ஆபரேஷன் அரபைமா’

ஆசிரியர் டூ முதல்வர்: யார் இந்த மாணிக் சாஹா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *