இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள Sci-Fi திரைப்படம் அயலான். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் படத்தில் 4500 VFX காட்சிகள் உள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைக்கான கால அவகாசம் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “வேற லெவல் சகோ” பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்பின்னர் சமீபத்தில் அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு இன்று (டிசம்பர் 20) அயலான் படத்தின் செகண்ட் சிங்கிள் “அயலா அயலா” பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன், கோதண்டம் ஆகியோருடன் இணைந்து ஏலியனும் நடனம் ஆடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடாலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நரேஷ் ஐயர், ஹிருதய் கட்டானி பாடியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
அரசு தேர்வுகள் 2024 : டிஎன்பிஎஸ்சி அட்டவணை இதோ!
நான்கு அணிகள் கடும் போட்டி… கோடிகளில் ஏலம் போன முதல் பழங்குடி வீரர்… யார் இந்த ராபின் மின்ஸ்?