நான்கு அணிகள் கடும் போட்டி… கோடிகளில் ஏலம் போன முதல் பழங்குடி வீரர்… யார் இந்த ராபின் மின்ஸ்?

Published On:

| By Manjula

robin minz first tribal player

பழங்குடி வீரர் ஒருவருக்காக நான்கு அணிகள் கடுமையாக போட்டி போட்ட சம்பவம் ஐபிஎல்  மினி ஏலத்தில் நடந்துள்ளது. robin minz first tribal player

நேற்று (டிசம்பர் 19) ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களும் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி வீரர் ராபின் மின்ஸ்(21) ரூபாய் 3.6 கோடிக்கு நேற்று (டிசம்பர் 19) குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அவரின் ஆரம்ப விலை 20 லட்சமாக இருந்த நிலையில் ராபினை ஏலத்தில் எடுக்க டெல்லி, கொல்கத்தா, மும்பை, லக்னோ அணிகள் கடுமையாக போட்டியிட்டன. இதனால் அவரின் விலை கோடிகளில் சென்றது.

இறுதியில் கடும் போட்டிக்கு பிறகு குஜராத் அணி அவரை 3.6 கோடி ரூபாய்க்கு வசப்படுத்தியது.

கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டதை விடவும், ஐபிஎல் வரலாற்றில் கால் பதிக்கும் முதல் பழங்குடி கிரிக்கெட் வீரர் என்ற பெருமை ராபினுக்கு கிடைத்துள்ளது.

இடது கை பொல்லார்ட் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அவரை ஏலத்திற்கு முன் புகழ்ந்திருந்தார். அதனால் தான் மும்பை அணி அவரை எடுக்க அதிக ஆர்வம் காட்டியது.

ஜார்க்கண்ட் மாநிலமாக இருந்தாலும் கூட அவர் முதல் தர போட்டிகளில் அந்த மாநிலத்துக்காக ஆடியதில்லை. என்றாலும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் U19, U25 அணிகளுக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தி இருக்கிறார்.

ராபினின் தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஜார்க்கண்ட் மாநில விமான நிலையத்தில் செக்யூரிட்டி ஆக பணிபுரிந்து வருகிறார். ராபினுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் வருவதற்கு அவர் தந்தை தான் முதற்காரணமாக இருந்துள்ளார்.

சென்னை கேப்டன் தோனிக்கு சிறுவயதில் பயிற்சியளித்த சஞ்சல் பட்டாச்சார்யாவே தற்போது ராபினுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். தோனியை போலவே ராபினும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவே விளையாடி வருகிறார்.

எனவே அவர் அடுத்த தோனியாக உருவெடுப்பாரா? என்ற கேள்வியும் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒடிசாவில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் 35 பந்துகளில் 73 ரன்கள் அடித்து ராபின் அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

IPL2024: பிரீத்தி ஜிந்தாவுக்கே விபூதி அடித்த சென்னை கிங்ஸ்… ஏலத்தில் நடந்த தரமான சம்பவம்!

Video: ஏலத்திற்கு பின் செம என்ஜாய்… இளம் கேப்டனுடன் ‘கூலாக’ விளையாடிய தோனி

பொன்முடிக்கு தண்டனை: தீர்ப்பு நகலை விரைந்து படித்த ஆளுநர்!

robin minz first tribal player

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share