’பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் ’நானே வருவேன்’ படமும் ஒரே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ படம் ஒருநாள் முன்னதாக செப்டம்பர்29 அன்று உலகம் முழுவதும் வெளியானது.
ஆனால், அப்படம் பற்றிய கலவையான விமர்சனங்கள், ’பொன்னியின் செல்வன்’ படத்தின் பேரலை ஆகியவற்றின் காரணமாக திரையரங்குகளில் ‘நானே வருவேன்’ படம் வசூல் அடிப்படையில் பின்தங்கியே இருந்தது.
படத்தின் பட்ஜெட் அடிப்படையில் வணிகரீதியாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கு லாபத்தை பெற்று தந்த படம் ’நானே வருவேன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஓடிடியிலும் இரண்டு படங்களும் முன்னுக்குப் பின் போட்டியிடும் விதமாக அமேசான் ப்ரைம் தளத்தில் ‘நானே வருவேன்’ வரும் அக்டோபர் 30ஆம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ நவம்பர் 4ஆம் தேதியும் வெளியாகின்றன.
இராமானுஜம்
வாடகைத் தாய்: எந்த விசாரணைக்கும் தயார்!- நயன், விக்கி தரப்பு எக்ஸ்குளூசிவ் தகவல்!
‘காதல்னு வந்துட்டா’ : இயக்குநர் ராம் – நிவின் பாலி பட அப்டேட்!