நரைத்த கேசத்தை கருமையாக்க பலரும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம், இளைஞர்கள் மத்தியில் ஹேர் கலரிங் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஹேர் டை, ஹேர் கலரிங் செய்யும்போது பக்க விளைவுகளை முன்னிறுத்தி கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விளக்குகிறார்கள் சரும மருத்துவர்கள். Things to keep in mind while doing hair coloring
‘டெம்ப்ரரி’ (Temporary), ‘செமி பெர்மனென்ட்’ (Semi-permanent), ‘பெர்மனென்ட்’ (Permanent) என மூன்று வகையான ஹேர் டைகள் கடைகளில் கிடைக்கின்றன. டெம்ப்ரரி ஹேர் டை 5 முதல் 10 நாட்கள் வரை முடியில் நிறத்தை தக்கவைக்கும். செமி பெர்மனென்ட் ஹேர் டை 20 – 30 நாட்களுக்கு நிறத்தை தக்கவைக்கும். பெர்மனென்ட் ஹேர் டை 45 நாட்கள் வரை நீடிக்கும்.
மார்க்கெட்டில் விற்கப்படும் ஹேர் டை பேக்கில் இரண்டு பாக்கெட்டுகள் இருக்கும். ஒன்று ஹேர் டை, மற்றொன்று ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ (Hydrogen Peroxide) என்ற ரசாயனம். ஹேர் டையில் ‘ஃபீனால்’ (Phenol), ‘அமைன்’ (Amine), அமோனியா போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை முடியினுள் டை செல்ல வழிவகுக்கும்.
ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு, முடிக்கான நிறத்தை தரும். இரண்டையும் கலந்து முடியில் அப்ளை செய்ய வேண்டும். ஃபீனால், அமைன் ரசாயனங்கள் தவிர, பிபிடிஏ (PPDA – Paraphenylenediamine) என்ற ரசாயனம் பொதுவாக அனைத்து ஹேர் டைகளிலும் இருக்கும். இந்த ரசாயனம் கொண்ட டை பயன்படுத்தியதும் சிலருக்கு முகம் வீக்கமடையலாம், முகம் சிவந்து காணப்படலாம், ஸ்கால்பில் அரிப்பு ஏற்படலாம். அப்படி நேர்ந்தால், அவர்கள் அதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நாட்கள் நிலைக்கும் பெர்மனென்ட் வகையான ஹேர் டைகளில் ரசாயனங்களும் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்துவதால் சருமப் பிரச்சினைகளும் முடி சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படலாம். சிலருக்கு தலையில் வியர்க்கும்போதும், தலை குளித்த பிறகும் முடியில் இருக்கும் டையின் ரசாயனங்கள் முகத்தில் படியும். இது காலப்போக்கில் கரும் புள்ளிகளாக (Deep Pigmentation) ஆகும். இதை சரிசெய்வது சவாலாக இருக்கும். அவை நிரந்தரமாகி விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சருமம், முடி மட்டுமன்றி நுரையீரலிலும் ஹேர் டையினால் பாதிப்பு ஏற்படலாம். டையில் வாசனைக்காக பல ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இந்த வாசனை சிலருக்கு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஹேர் டையை போலவே கலர் கலராக முடியில் பூசிக்கொள்ளும் ஹேர் கலரிங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதுதான். ஹேர் கலரிங் செய்வது முடியின் வேர்க்காலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் முடி உதிர்தல், முடி சேதமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பொடுகு மற்றும் ஸ்கால்பில் அரிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். முடிக்கு ஏதேனும் சிகிச்சை எடுத்திருந்தால் 14 நாட்களுக்குப் பிறகு ஹேர் கலரிங், ஹேர் டை செய்ய வேண்டும். Things to keep in mind while doing hair coloring
PPDA, அமோனியா, ஃபீனால் ஆகிய ரசாயனங்கள் இல்லாத ஹேர் டையை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து வகை டையிலும் பக்கவிளைவுகள் இருக்கும். பாதிப்பை குறைப்பதற்கு பெர்மனென்ட் டைக்கு பதிலாக டெம்ப்ரரி டை தேர்ந்தெடுக்கலாம். ஹேர் டையை அடிக்கடி பயன்படுத்தாமல் குடும்ப விழாக்கள், அலுவலக மீட்டிங் போன்ற முக்கியமான நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாம்.”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
1000 ரூபா பெட்ரோல்…500 ரூபா வெடி: அப்டேட் குமாரு
நாத்திக கொள்கையை அரசியலமைப்பு பாதுகாக்கிறது: உதயநிதி வாதம்!