ஹீரோ பாதி… வில்லன் பாதி… ஜூனில் வெளியாகும் கமலின் இரண்டு அவதாரங்கள்!

சினிமா

இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் உள்ள முக்கியமான படம் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள கல்கி 2898AD.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான “மகாநதி” படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் கல்கி 2898AD படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக உருவாகும் கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமல் ஹாசன் சமந்தப்பட்ட காட்சிகள் சில மணி நேரம் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் கல்கி படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த ஒரு ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

மேலும், கல்கி படம் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதன் பிறகு படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கல்கி 2898 AD படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 27 ஆம் தேதி கல்கி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகிய மூவரும் இணைந்து மாஸாக நிற்கும் ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்ப்பதற்கே ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

2898 காலகட்டத்தில் நடக்கும் ஒரு வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக கல்கி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜூன் மாதம் 13 ஆம் தேதி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது மற்றொரு பெரிய பட்ஜெட் படமான கல்கி படமும் ஜூன் மாதமே வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து செம கலெக்சன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி இந்தியன் 2 படத்தில் ஹீரோ மற்றும் கல்கி படத்தில் வில்லன் என இரண்டு படங்களிலும் கமல் அவர்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.

பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், எதிர்பார்த்த பிரம்மாண்ட வெற்றி கிடைக்கவில்லை. சலார் தவறவிட்ட அந்த பிரம்மாண்ட வெற்றியை, பிரபாஸுக்கு கல்கி படம் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ஓஆர்எஸ் கரைசல் என்றால் என்ன? வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சண்டே ஸ்பெஷல்: மாம்பழம் வாங்கப் போறீங்களா… இதை கவனிங்க!

ஆ.ராசா தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு… திக் திக் 20 நிமிடங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0