கொசுவர்த்தி சுருள் : ட்விட்டரில் புயலைக் கிளப்பிய உதயநிதி

அரசியல் டிரெண்டிங்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

நாடு முழுவதும் புயலை கிளப்பிய உதயநிதியின் பேச்சை கண்டித்தும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அலுவலகங்கள் முன்பு பாஜகவினர் இன்று (செப்டம்பர் 9) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த எஜ்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

இந்தசூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரே ஒரு கொசுவர்த்தி சுருள் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். எந்த கேப்ஷனும், விவரமும் இல்லாமல் உதயநிதி போட்ட இந்த பதிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

“கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற தனது பேச்சில் உதயநிதி உறுதியாக இருப்பதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த கொசுவர்த்தி சுருளை பதிவிட்டிருக்கிறார்” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

உதயநிதியின் ட்வீட்டை குறிப்பிட்டு, சென்னை,  ‘மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்குவால் இறந்திருக்கிறார். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம்’ என்று ஒரு பயனர் போஸ்ட் போட்டுள்ளார்.

அதில், டெங்குவால் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் இரங்கல் கூறி, தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்ட பதிவை டேக் செய்துள்ளார்.

உதயநிதியின் பதிவை விமர்சித்துள்ள பாஜக துணைப் பொதுச்செயலாளர் நாராயணன் திருப்பதி, ‘தமிழகத்தி‌ல் டெங்கு ஜுரம் கட்டுப்படுத்த முடியாமல், அதிகமாகி வருவதால் கொசுவர்த்தி சுருள் வாங்குகிறது தமிழக அரசு என்கிறாரோ?
இதை வாங்குவதில் எவ்வளவு ஊழலோ? பிடிஆர் கணக்கு பெருகுகிறதே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ட்விட்டர் பக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ட்விட்டை பகிர்ந்து, “நீ விளையாடு நண்பா” என்ற கமெண்ட்டுடன் “ஃபயர்” இமோஜியை போட்டுள்ளார்.

இதுபோன்று திமுகவினர் உதயநிதிக்கு ஆதரவாகவும், பாஜகவினர் கண்டனம் தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரியா

“இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை” – தாம்பரம் காவல் ஆணையர்

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: மரியாதை செலுத்தியவர்கள் யார் யார்?

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *