ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 3 டிஐஜிக்கள், 25 எஸ்பிக்கள், 30 ஏடிஎஸ்பிகள் உள்ளிட்ட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை இமானுவேல் சேகரனின் மகள் மற்றும் அவரது குடும்பத்தினர், செல்லூர் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அரசு மற்றும் திமுக சார்பில் அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதுபோன்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அன்வர்ராஜா, மணிகண்டன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்,பி.உதயக்குமார், “இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சட்ட ரீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அதை தற்போது திமுக அரசு அறிவித்திருக்கிறது. இவர்கள் அறிவிப்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் அதை செய்வார்” என்றார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும்,
பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஓபிஎஸ் சார்பில் அவரது ஆதரவாளர் தர்மர் எம்.பி, மருது அழகுராஜ் உள்ளிட்டோரும், அமமுக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
பிரியா
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி: டிஜிபி உத்தரவு!
பாஜகவினர் போராட்டம்: விபூதி பட்டை இட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது!